இலவச கண் சிகிச்சை முகாம்
பழைய பாளையம் கிராமத்தில், ஓ.என்.ஜி.சி. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில், ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். சமூக பொறுப்புணர்வு திட்ட பொறுப்பாளர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், எழிலரசிஇந்திரஜித், காந்திமதி சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதாதர்மலிங்கம், அங்குதன், தமிழரசி, ஓ.என்.ஜி.சி. நிறுவன உற்பத்தி பிரிவு தலைவர் வில்சன், பகுதி தலைவர் குணசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சுதீர், இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பழையபாளையம், வேட்டங்குடி, தாண்டவன்குளம், மாதாணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 200 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. டாக்டர் கணேஷ்குமார் தலைமையில் டாக்டர்கள் பேட்டாநாயக்ரெட்டி, சேகர், அறிவழகன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.