இலவச கண் சிகிச்சை முகாம்
திருப்பத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், திருப்பத்தூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை முகாமை சேலம் ரோட்டில் உள்ள வினோதினி கண் மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். எம்.பன்னீர்செல்வம், ஜெ.ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். மட்றப்பள்ளி கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் வி.வினோதினி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் சுமார் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஆர்.ஆர்.மனோகரன், ஜி.வெங்கடேசன், நல்லாசிரியர் வீரமணி, உள்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் செயலாளர் என்.சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story