பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்


பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x

நாங்குநேரியில் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சார்பில், தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் கண்பரிசோதனை செய்து, டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு தனது சொந்த செலவில் கண் கண்ணாடிகளை வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டோனாவூரில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 2 சிறுவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் டோனாவூரில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story