2-வது நாளாக வருவாய்த்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
2-வது நாளாக வருவாய்த்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று முன்தினம் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் அவர்கள் 2-வது நாளாக நேற்றும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றவில்லையென்றால் சங்கத்தின் மாநில தலைமை முடிவெடுக்கும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடவும் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் தயாராக உள்ளனர்.