மாணவ, மாணவிகளுக்குவாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி:கலெக்டர் தலைமையில் நடந்தது
மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி கொடுவிலார்பட்டியில் நடந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும்போது, "மாணவ, மாணவிகளுக்கு எந்த படிப்பில் ஆர்வம் அதிகம் உள்ளதோ அதை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஆர்வமுடன் கற்றால் தான் முழுமையாக வெற்றி பெற முடியும்" என்றார். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் தாமோதரன், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.