ஆதரவற்றவர்களுக்கு உணவு


ஆதரவற்றவர்களுக்கு உணவு
x

நெல்லையில் ஆதரவற்றவர்களுக்கு உணவை துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை சந்திப்பு சரணாலயத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசுகள் மற்றும் உணவுகளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கினார். இதேபோல் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

தொடர்ந்து ஆணையர்குளம் பொதிகை நகரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லத்தில் மதிய உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி உறுப்பினர் பாலன் என்ற ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story