பக்தர்களுக்கு அன்னதானம்


பக்தர்களுக்கு அன்னதானம்
x
தினத்தந்தி 30 Jun 2023 1:15 AM IST (Updated: 30 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சாய் பாபா கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய் பாபாவுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகை அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்படும். பின்னர் மதிய நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதன்படி வியாழக்கிழமையான நேற்று சாய்பாபாவுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுதவிர தினமும் காலை இட்லி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் மாலையில் சிறப்பு பூஜையும், பஜனையும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.


Next Story