பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி குறைவு


பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி குறைவு
x

பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி குறைந்தது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான், கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, செண்டி, அரளி, பிச்சி, கோழிக்கொண்டை போன்ற பூச்செடிகளை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story