மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மீன் வியாபாரி
மார்த்தாண்டம் நந்தன்காடு ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவருக்கு கலா (48) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
செல்வம் மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
சம்பவத்தன்று செல்வம் மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் வைத்து மதுபோதையில் மனைவி கலாவிடம் தகராறு செய்துள்ளார். இதை கண்டித்த மனைவி 'ஏன் பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்துகிறீர்கள்' என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த செல்வம் வீட்டின் அருகில் நின்ற மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து கலா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.