தீத்தடுப்பு செயல்விளக்கம்
கபடி போட்டியில் வெற்றி அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பரிசு வழங்கினார்.
வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலர்கள் பாரதிதாசன், குமார், நவீன்குமார், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜாகிர்அகமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொண்டகிந்தனபள்ளியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டிக்கு நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். இறுதி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திருப்பத்தூர் மாவட்ட கபடி சங்க தலைவர் எஸ்.பி.சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் குட்லக் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் டி.இளையராஜா, என்.கே.எம்.சந்திரா முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற 10 அணிகளுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்,
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.