கரும்பு ஆலையில் தீ விபத்து- நாட்டு சர்க்கரை மூட்டைகள் எரிந்து சேதம்


கரும்பு ஆலையில் தீ விபத்து- நாட்டு சர்க்கரை மூட்டைகள் எரிந்து சேதம்
x

கரும்பு ஆலையில் தீ விபத்து- நாட்டு சர்க்கரை மூட்டைகள் எரிந்து சேதம்

ஈரோடு

கடத்தூர்

கோபியை அடுத்த கங்கம்பாளையத்தில் வரதராஜ் என்பவருக்கு சொந்தமான கரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் கரும்பில் இருந்து நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கரும்புகள் வெட்டப்பட்டு இந்த ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கம்போல் நேற்று கரும்பு ஆலையில் வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென கரும்பு ஆலையில் தீப்பிடித்து உள்ளது. இந்த தீ மளமளவென பரவி ஆலையின் மேற்கூரையிலும் தீப்பற்றியது. மேலும் அந்த பகுதியில் கரும்பு சக்கைகள் அதிக அளவில் இருந்ததால் அதிலும் தீப்பற்றியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த கரும்புகள், நாட்டு சர்க்கரை மூட்டைகள், கரும்பு தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் போன்றவை எரிந்து சேதம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story