கயிறு திரிக்கும் ஆலையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள்- நார் எரிந்து நாசம்

கயிறு திரிக்கும் ஆலையில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள்- நார் எரிந்து நாசம்
x

ஈரோடு அருகே கயிறு திரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், நார் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு

சோலார்

ஈரோடு அருகே கயிறு திரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், நார் எரிந்து நாசம் ஆனது.

கயிறு திரிக்கும் ஆலை

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அசோகபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 53). இவருக்கு ஈரோடு வெண்டிபாளையத்தை அடுத்த காந்திபுரம் அருகே கயிறு திரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. நேற்று மாலை இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எந்திரங்கள்- நார்கள் எரிந்து நாசம்

எனினும் இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் நார்கள் எரிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தில் காய்ந்து கிடந்த புற்கள் மற்றும் செடிகளில் பற்றிய தீ பரவி கயிறு திரிக்கும் ஆலையிலும் பிடித்து உள்ளது,' என்றனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story