20 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு


20 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு
x
தினத்தந்தி 23 Sept 2023 1:15 AM IST (Updated: 23 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளாட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்தவகையில் பழனி நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொசு உற்பத்தி தடுப்பு பணி, கொசு புகைமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பழனி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல், சளி தொற்றுக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆண்கள் வார்டில் கொசு வலையுடன் கூடிய 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 10 படுக்கைகளும் போடப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, பழனியை பொறுத்தவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருப்பினும் மழை காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் அவர்களுக்கு நிலவேம்பு குடிநீர், 'ஓ.ஆர்.எஸ்' கரைசல் கொடுத்து வருகிறோம். டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.


Related Tags :
Next Story