1½ வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
1½ வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
லால்குடி:
பாலியல் தொல்லை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர் தினமும் இரவில் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அவரும், அவரது மனைவி மற்றும் குழந்தையும் வீட்டில் தூங்கியுள்ளனர்.
அப்போது திடீரென குழந்தை அழுததால் அவரது மனைவி அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது தனது குழந்தைக்கு, தனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போக்சோவில் கைது
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, குழந்தைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தையின் தந்தை மற்றும் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
பெற்ற குழந்தைக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.