வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் சுற்றுலா
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
வந்தவாசி, ஆரணி, செய்யாறு உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் ஆத்மா திட்டத்தின் சார்பில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு 5 நாள்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர். வந்தவாசி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிந்தாமணி தலைமையில் சென்ற அவர்களுக்கு கரும்பு பயிரை தாக்கும் நோய்கள், தேவையான ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை குறித்தும், கரும்பு பயிரில் துல்லிய பண்ணையம் குறித்து ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் விளக்கி கூறினர்.
ஏற்பாடுகளை வந்தவாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி, வட்டார வேளாண்மை அலுவலர் விஜய்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story