விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு


விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:30 AM IST (Updated: 19 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே சாைல சேதம் அடைந்ததால் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தேனி

போடி அருகே உள்ள மலைப்பகுதிகளான ஊத்தாம்பாறை, கொட்டகுடி, குரங்கணி, போடிமெட்டு, பிச்சாங்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் போடியில் இருந்து அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஊத்தாம்பாறை மலைக்கிராமத்திற்கு செல்லும் தார்சாலை சேதம் அடைந்தது. இதனால் ஊத்தாம்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவிலுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் விளைநிலங்களில் இருந்து மாங்காய், ஏலக்காய், தென்னை, காபி, மிளகு போன்ற பொருட்களை சந்தைக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தால் ரூ.49.50 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைத்து ஓரிரு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் கனமழைக்கு சாலை முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில் கிணற்றை காணவில்லை என்று வரும் நகைச்சுவை காட்சிபோல் தார்சாலையை காணாமால் தவித்து வருகிறோம். இந்த சாலையை விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மலைக்கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது என்றனர்.


Next Story