விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் சுர்ஜித் சங்கர் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், ஓரடியம்புலம், பிரிஞ்சுமூலை, திருமாளம், வாட்டாக்குடி, உம்பளச்சேரி, கோவில்பத்து, நாலுவேதபதி, அவரிக்காடு, ஆயக்காரன்புலம், தென்னடார், பஞ்சநதிக்குளம், தாணிக்கோட்டகம், தகட்டூர், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த எள், கடலை, பயறு, உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story