உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை


உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 April 2023 12:30 AM IST (Updated: 3 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், பண்டாரவாடை, தென்பிடாகை, கீழக்கரையிருப்பு, மேலக்கரையிருப்பு, மருங்கூர், சீயாத்தமங்கை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பூதனூர், போலகம், குருவாடி, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், ஆலத்தூர், இடையாத்தங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், கணபதிபுரம், பொரக்குடி, அம்பல், கொங்கராயநல்லூர், ஏர்வாடி, கோட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் நிலையில் உள்ளது. நெல் சாகுபடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடியில் போதிய மகசூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பருத்தி சாகுபடியிலாவது அதிக மகசூல் கிடைக்குமா? என எதிர்பார்க்கிறார்கள். மேலும் பருத்தி சாகுபடிக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story