விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நீதிசோழன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கபிரியேல், அகில இந்திய விவசாய கிராம தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நகர்புறத்திற்கும் விரிவு படுத்த வேண்டும். வீடு இல்லா அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும். 55 வயது கடந்த அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் லூர்துசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story