கட்டிலில் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்


கட்டிலில் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிலில் படுத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கட்டிலில் பிணம்போல படுத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் காதர்உசேன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியாவுடன் இதர பொருட்களை வற்புறுத்தி விற்பதை நிறுத்த வேண்டும்.

மும்முனை மின்சாரம்

தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் இளங்கோவன், முன்னோடி விவசாயி கணேசன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பாபநாசம் வட்ட அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்ததன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து வி்ட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.






Next Story