அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு் 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் முடிவு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு் 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் முடிவு
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு அமைப்பது என்று 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் குளம், குட்டைகளில் நீர் அளவிடும் கருவிகள் திருடப்படுவதை தடுக்க பாதுகாப்பு குழு அமைப்பது என்று 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தனர்.

நீர் அளவிடும் கருவிகள்

பெருந்துறை தொகுதியை வறட்சியிலிருந்து காப்பாற்ற தமிழக அரசு ரூ.16.50 கோடி மதிப்பில், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது. இந்த திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில் நிரம்பும் நீரை அளவிடுவதற்காக, ஆங்காங்கே நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விடுகிறார்கள். பெருந்துறை ஒன்றியத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அளவிடும் கருவிகள் திருட்டுப் போய் விட்டன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளித்துள்ளனர்.

பாதுகாப்பு குழு

இந்தநிலையில் இதுகுறித்து பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட துடுப்பதி, சுள்ளிப்பாளையம், சீனாபுரம், பொன்முடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துடுப்பதி ஊராட்சி தலைவர் டி.கே.பெரிசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு ஊரிலும் பாதுகாப்பு குழு அமைத்து நீர் அளவிடும் கருவிகள் திருட்டு போவதை தடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சமூக ஆர்வலர் பெருந்துறை முருகபூபதி, சுள்ளிப்பாளையம் பெரியசாமி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story