நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு


நெல்லிக்குப்பத்தில்  கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
x

நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது.

கடலூர்


நெல்லிக்குப்பம்,


தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டை அருள் ஜோதி ராமலிங்கம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டுக்கு சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். மாநாட்டை விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன் தொடங்கி வைத்து பேசினார். ஆலை மட்ட செயலாளர் தென்னரசு அறிக்கை வாசித்தார்.

மாவட்ட இணை செயலாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், கரும்பு சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ.ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். முடிவில் ராமானுஜம் நன்றி கூறினார்.

மாநாட்டின் முடிவில் மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாய் வழங்குவதோடு, மாநில அரசு அறிவித்த எஸ்.ஏ.பி நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் டன் 1-க்கு 100 ரூபாய் பிடித்தம் செய்த தொகையை உடனே விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.


அரசு அதிகாரிகள், ஆலை நிர்வாகம், விவசாயிகள் பங்கேற்கும் பழையபடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலைக்கழிக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story