பஸ் மோதி விவசாயி பலி
இடையக்கோட்டை அருகே பஸ் மோதி விவசாயி பலியானார்.
திண்டுக்கல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நெடுவலசை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் இடையக்கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூலனூர்- மார்க்கம்பட்டி சாலையில் திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் மணிகண்டனை கைது செய்தார்.
Related Tags :
Next Story