விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரத்தினபுரி கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 39), விவசாயி. இவர், அடிக்கடி செல்போன் பேசிக்கொண்டு இருப்பதை அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11-ந்தேதி நிலத்திற்கு சென்ற தருமன், அங்கு குடிபோதையில் விஷம் குடித்துவிட்டதாக மனைவி தீபாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story