பூக்கள் விலை வீழ்ச்சி


பூக்கள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூக்களின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது அதிகமாக விவசாயிகள் பூக்களை உற்பத்தி செய்துள்ளனர். கடும் வெயில் காரணமாக அதிக வரத்து உள்ளது. இதனால் தற்போது பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரி அழகுராஜ் கூறியதாவது:-

3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ தென்காசி மாவட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 வரை விற்பனையானது. ஆனால் இன்று (அதாவது நேற்று) ஒரு கிலோ மல்லிகை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேந்தி பூ, தாமரைப்பூ, துளசி, அரளி பூ, ரோஜா பூ போன்ற அனைத்து பூ வகைகளும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதிகமானோர் பூக்களை வாங்கி வருகிறார்கள். இதனால் இதன் விலை சற்று அதிகரிக்க கூடும் என தெரிகிறது, என்றார்.



Next Story