இஸ்லாமிய வெல்பர் அசோசியேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்
இஸ்லாமிய வெல்பர் அசோசியேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மேல்விஷாரம் இஸ்லாமிய வெல்பர் அசோசியேஷன் மற்றும் வேலூர் சி.எம்.சி. கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் புரை அறுவைசிகிச்சை முகாம் மேல்விஷாரம் சிட்டிசன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடத்தியது. முகாமிற்கு முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரும் இஸ்லாமிய வெல்பர் அசோசியேஷன் தலைவருமான ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். செயலாளர் அப்துல் குத்தூஸ், பள்ளியின் தாளாளர் இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் அஜீமுத்தீன் வரவேற்றார். வேலூர் சிஎம்சி கண் சிகிச்சை நிபுணர் ஜான் பி.ஹிட்லர் தலைமையிலான 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 50 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 300 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் சங்க உறுப்பினர்கள் சபிக்அகமது, முபின் அகமது, அல்தாப்அகமதுஇம்தாதுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.