கண் சிகிச்சை முகாம்
கடையநல்லூரில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூரில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் டி.எம்.பி. பவுண்டேஷன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
கிளை மேலாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பவுண்டேஷன் நிர்வாக அலுவலர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். முகாமில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்தனர்.
டாக்டர்கள் வீணா, அபா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வங்கி ஊழியர்கள் சுரேஷ், விஜயகுமார், சிவகாலபெருமாள் ஆகியோர் செய்தனர்.
Related Tags :
Next Story