கண் சிகிச்சை முகாம்
புல்லுக்காட்டுவலசையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், பாவூர்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. லயன்ஸ் சங்கத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபாசக்தி முகாமை தொடங்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 153 பேர் கலந்து கொண்டனர். அதில் அறுவை சிகிச்சைக்காக 28 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். 30 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஜானகிராமர், யூனியன் துணை தலைவர் முத்துகுமார், குமார், ஊராட்சி செயலர் முத்துகுமார், பஞ்சாயத்து துணை தலைவர் திருப்பதிராமர், அன்பழகன், மதன சிங், நாகரத்தினம், செல்வராஜ், குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.