கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x

கண் சிகிச்சை முகாம் நடந்தது

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் பிஸி கிங்ஸ் லயன்ஸ் சங்கம், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மேலப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. வட்டார தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மேலப்பாவூர் பஞ்சாயத்து தலைவர் சொள்ளமுத்து மருதையா முகாமை தொடங்கி வைத்தார். காசிமேஜர்புரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 16 பேர் அறுவை சிகிச்சைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் எல்.எம்.குமார் தலைமையில் செய்திருந்தனர்.


Next Story