விஷ வண்டுகள் அழிப்பு


விஷ வண்டுகள் அழிப்பு
x

திருநகரி ஊராட்சியில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி ஊராட்சி சர்வ மானிய தெரு, வாணிய குளத்தெரு மற்றும் சங்கடித்தெரு ஆகிய தெருக்களில் உள்ள மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்து அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவர் சுந்தரராஜனிடம் விஷ வண்டுகளை அழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடா்ந்து அவரது ஏற்பாட்டின் பேரில் பூம்புகார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.


Next Story