திருமணமான முன்னாள் காதலியை காட்டுக்குள் அழைத்து சென்று நகைக்காக அடித்துக் கொன்ற முன்னாள் காதலன்..!


திருமணமான முன்னாள் காதலியை காட்டுக்குள் அழைத்து சென்று நகைக்காக அடித்துக் கொன்ற முன்னாள் காதலன்..!
x

திருமணமான முன்னாள் காதலியை தனியே காட்டுக்குள் அழைத்து சென்று நகைக்காக இளைஞர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி,

திருமணமான முன்னாள் காதலியை தனியே அழைத்த இளைஞர், 3 சவரன் நகைக்காக அவரை அடித்து கொன்று, சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஷீலாராணி. இவருக்கு திருமணமாகி, 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், வீட்டிலிருந்தபடியே பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். ஷீலா ராணி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சிவகாசியை சேர்ந்த முகமது யாசின் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் வேறு வேறு நபரை திருமணம் செய்து, ஒரே ஊரில் தனித்தனியே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். திருமணத்திற்கு பின்பும் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று ஷீலாராணியை தனியே அழைத்த முகமதுயாசின், அவரிடம் தனது வறுமை நிலையை கூறி பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

தன்னிடம் பணம் இல்லை எனக்கூறிய ஷீலா ராணியை, திருத்தங்கல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற முகமதுயாசின், கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை கேட்டு ஷீலாராணியை அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் சடலத்தை அருகில் உள்ள கிணற்றில் வீசி தப்பிச்சென்ற நிலையில், சடலத்தை கிணற்றிலிருந்து மீட்ட போலீசார், முகமதுயாசினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story