கியாஸ் சிலிண்டர் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும்


கியாஸ் சிலிண்டர் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும்
x

கியாஸ் சிலிண்டர் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாதர் சங்க தலைவி கண்ணகி:-

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.112, டீசல் ரூ.110 என விலை உயர்ந்துள்ளதற்கு மத்திய அரசுதான் காரணம்.இப்படி விலையை உயர்த்தி விட்டு தற்போது விலை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் சிலிண்டர் வாங்குவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. கியாஸ் சிலிண்டர் வாங்கும் வீடுகளில் உள்ள அனைவருமே பணம் கொடுத்துதான் கியாஸ் சிலிண்டர் வாங்குகின்றோம். .யாரும் பணம் கொடுக்காமல் சிலிண்டர் வாங்குவது கிடையாது. அப்படி இருக்கும்போது கியாஸ் சிலிண்டர் வாங்கும் அனைவருக்கும் மத்திய அரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி கோகிலா:-

கியாஸ் சிலிண்டர் ஒன்று தற்போது ரூ.1110 கொடுத்து வாங்கி உள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேல் கியாஸ் சிலிண்டருக்கு வங்கி கணக்கில் எந்த ஒரு மானியமும் ஏறவில்லை. என்ன காரணத்தினால் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உண்மையாகவே மகிழ்ச்சியான அறிவிப்பு தான். அது போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். இன்னும் விலை குறைக்கப்பட வேண்டும். தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலையை பார்க்கும்போது தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். கியாஸ் சிலிண்டரின் விலையை இன்னும் குறைக்க வேண்டும். அனைவருக்கும் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


Related Tags :
Next Story