ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி தமிழகத்தின் திருப்புமுனையாக அமையும்;முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி தமிழகத்தின் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
ஈரோடு
பவானி
காலிங்கராயன் வாய்க்கால் அர்ப்பணிப்பு தினத்தையொட்டி பவானியை அடுத்த காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள காலிங்கராயன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அவர் வெற்றிவாகை சூடுவார். தற்போது சூழ்நிலைகள் மாறி உள்ளது. எனவே வெற்றி என்கிற இலக்கை நாம் எட்டப்போகிறோம். இந்த இடைத்தேர்தல் தமிழகத்துக்கு திருப்புமுனையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story