கலெக்டர்-போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


கலெக்டர்-போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x

நெல்லையில் கலெக்டர்-போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் கலெக்டர்-போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அலுவலகம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 'சமத்துவ நாள்' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கமிஷனர் அலுவலகம்

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர். இதில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். அவர் சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க, தொடர்ந்து அமைச்சு பணியாளர்கள், போலீசாா் அனைவரும் வாசித்து ஏற்றனர்.


Next Story