சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கி, அவர் உறுதிமொழி வாசிக்க அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பொள்ளாச்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story