தொழில் முனைவோர் கருத்தரங்கம்
ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக 'தொழில் முனைவோர் மேம்பாடு பற்றிய கருத்தரங்கம்' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தர மதிப்பீடு ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரிவீஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். சிறப்பு விருந்தினராக நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பார்வதி கலந்து கொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி ிவ பாரதி பேசினார். அவரை பேராசிரியர் மருதையா பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். முடிவில், பேராசிரியர் ராஜ் பினோ நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், திலீப் குமார், திருச்செல்வம், சிரில் அருண், ெஜயராமன், மோதிலால் தினேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேர்தல் எழுத்தறிவு மன்ற தொடக்க விழா நடந்தது. மன்ற இயக்குனர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரும், தேர்தல் பிரிவு அதிகாரியுமான சங்கரநாராயணன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து பேசினார்.
பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மன்ற இணை பொறுப்பாளர் அந்தோணி பிரைட் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மாணவ செயலர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.