தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்


தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 2:19 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கலந்து கொண்டு, பல்வேறு சுய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அளிக்கும் மானியம் மற்றும் கடன் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஆடு, மாடுகள் வாங்குவதற்கும், கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் கடைகள் வைத்து நடத்துவதற்கு மற்றும் பெட்டிக்கடை, பல வியாபார கடை உள்ளிட்ட கடைகள் வைத்து நடத்துவதற்காக மானியத்துடன் வங்கி கடன் வழங்குவது, உணவு பதப்படுத்துதல் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.35 ஆயிரம் வீதமும், இதர தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் வீதமும் வங்கி கடன் தொகையுடன் மானிய உதவி வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பி.டி.ஓ.ரெஜினா ராணி, மகளிர் உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், வட்டார மேலாளர் சகிலாதேவி மற்றும் வங்கி மேலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் பெறுவதற்கு 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


Next Story