தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேசூர் பேரூராட்சியில் உள்ள பாடசாலை தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் என் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு, மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு இலவச தமிழ் கல்வி ஆங்கில கல்வி வழங்குவதைப் பற்றியும் சிறப்பான முறையில் கல்வி கற்போம் என்ற வாசகத்துடன் மாணவர் சேர்க்கை ஊர்வலம் அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. அரசு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகம், நோட்டு, பேனா, ஸ்கூல் பேக், தினமும் காலை உணவு, மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டு அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, சரஸ்வதி, திவ்யா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் துர்கா, லதா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.