தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
x

நெல்லையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமக்ரா சிக்ஷா, ஜாலி பியூச்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜாலி போனிக்ஸ் என்ற பெயரில், விளையாட்டு வழி ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 659 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஒன்றாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளை கற்றுக் கொண்டனர். ஜாலி பியூச்சர்ஸ் நிறுவன மேலாளர் கோமதி தலைமையில், பயிற்சியாளர்கள் வள்ளிகுமார், அபர்ணா ஜெயராமன் மற்றும் ஹரிணி நம்பி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


Next Story