திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் நகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஒய்.எம்.ஆர்.பட்டி, ஆர்த்தி தியேட்டர் சாலை, மாநகராட்சி அலுவலக சாலை, வெள்ளைவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story