ஓசூர் நாகம்மா கோவிலில் ஆடி திருவிழாபக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்


ஓசூர் நாகம்மா கோவிலில் ஆடி திருவிழாபக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 7 Aug 2023 1:00 AM IST (Updated: 7 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சின்ன எலசகிரி காமராஜர் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆடி மாத உற்சவ திருவிழா கூழ்வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அம்மனுக்கு சீர் வரிசைகளை படைத்து பெண்கள் வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கரகம் சுமத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வெள்ளியால் ஆன அம்மன் முகத்துடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட மலர் கரகமானது பக்தரின் தலையின் மீது அமர்த்தப்பட்டது. கரகத்தை தலையில் சுமந்தவாறு காமராஜர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது குழந்தைகள் பெண்கள் என ஏராளமானவர்கள் பல்வேறு சீர்வரிசைகளை கையில் ஏந்தியவாறு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story