ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம்


ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம்
x

இடையாத்தங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

இடையாத்தங்குடி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பம்

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் கணபதிபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளாறு, பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பஸ்நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தின் அடி பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமாலும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அகற்ற வேண்டும்

மேலும் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த மின்கம்பம் அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளது.

இதுகுறித்து மின்வாரியஅதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story