மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

கொள்ளிடம் அருகே வீட்டின் மீது பஸ் மோதிய விபத்தில் வீட்டின் இருந்த மின் வயர் பஸ்சில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே வீட்டின் மீது பஸ் மோதிய விபத்தில் வீட்டின் இருந்த மின் வயர் பஸ்சில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

தொழிலாளி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தற்காஸ் கிராமம் செல்லத்தம்பாள் நகரை சேர்ந்தவா் சின்னப்பிள்ளை. இவருடைய மகன் மணிவண்ணன் (வயது45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை சிதம்பரத்திலிருந்து பழையாறு துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் செல்லத்தம்பாள் பஸ் நிறுத்தத்தில் ஏறினார். தற்காஸ் பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வந்த போது மணிவண்ணன் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பஸ்சுக்கு வழி விட அரசு பஸ்சை டிரைவர் சற்று திருப்பிய போது சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது. இதில் அந்த வீட்டிலிருந்து வந்த மின் வயர் பஸ்சில் சிக்கியது. அப்போது பஸ்சில் இருந்து இறங்க முயன்ற மணிவண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிவண்ணன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிவண்ணனுக்கு செல்வி (40) என்ற மனைவியும், கனிவண்ணன் (25) என்ற மகனும், கவுசல்யா (15) என்ற மகளும் உள்ளனர்.


Next Story