மின்சார பெருவிழா


மின்சார பெருவிழா
x

நாகையில் மின்சார பெருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் ஒரு தனியார் பள்ளியில் ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் மின்சார பெருவிழா நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சதீஸ்குமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். நாகைமாலி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசியதாவது:- மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மின்சாரம் தடையில்லாமல் வினியோகம் செய்ய முயற்சி செய்து வருகிறது. மின்சாரம் இன்றி உலகம் இனி அமையாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழக அரசின் தொடர் முயற்சியினால் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நாகை மாவட்டம் இயற்கை இடர்பாடு நிறைந்த மாவட்டம் என்பதால் வேளாங்கண்ணி பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் பூமிக்கடியில் மின்கம்பிகள் புதைக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்படுகிறது.. விரைவில் நாகை நகர பகுதியிலும் இந்த திட்டம் தொடங்கப்படும். தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களது புகார்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார். முடிவில் நாகை கோட்ட செயற்பொறியாளர் சேகர் நன்றி கூறினார்.


Next Story