கிருஷ்ணர் கோவிலில் தேர்த்திருவிழா


கிருஷ்ணர் கோவிலில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணர் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் இஸ்கான் சார்பில் பராமரிக்கப்படும் கிருஷ்ணர், பலராம் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சார்பில் 6-வது ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி ஊஞ்சல் சேவை, ஆன்மிக சொற்பொழிவு, ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. வனத்துறை அலுவலகம், பஸ் நிலைய சாலை, எம்.ஜி. ரோடு வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story