அரசு பஸ் மோதி முதியவர் பலி


அரசு பஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார்.

முதியவர்

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள தெற்கு கங்கன்குளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் மாடசாமி (வயது 55). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு திருமணமாகவில்லை. அவரது தாயார் மரியபுஷ்பம் என்பவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் சுமார் 7 மணியளவில் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள நெல்லை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள தனியார் பள்ளி அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மாடசாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவரான குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெபமணி மகன் பால்ராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story