திண்டுக்கல் அருகே கார் மோதி மூதாட்டி பலி


திண்டுக்கல் அருகே கார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 25 Feb 2023 2:00 AM IST (Updated: 25 Feb 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 75). அவருடைய மனைவி பழனியம்மாள் (70). இவர்கள் 2 பேரும், சின்னாளப்பட்டி பகுதியில் துக்க வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று மாலை மொபட்டில் திண்டுக்கல் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வெள்ளோடு பிரிவு அருகே மொபட் வந்தது. அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பெட்ரோல் நிரப்பி விட்டு திண்டுக்கல் வருவதற்காக சாலையை கடந்தனர்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் பரிதாபமாக உயிர்ழந்தார். பலத்த காயத்துடன் தேவராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பாத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story