மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 25 July 2023 1:30 AM IST (Updated: 25 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எருமலைநாயக்கன்பட்டியில், பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் வந்த டிராக்டரை மறித்தனர். அப்போது அதன் டிரைவர், டிராக்டரை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்தனர். அதில், கிராவல் மண் அள்ளிவந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர் எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story