ஊருணி தூர்வாரும் பணி
தாயில்பட்டி அருகே ஊருணி தூர்வாரும் பணியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே ஊருணி தூர்வாரும் பணியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
தூர்வாரும் பணி
தாயில்பட்டி ஊராட்சியில் வெம்பக்கோட்டை வேளாண் பொறியியல் துறை சார்பில் கெச்சலா ஊருணி தூர்வாரும் பணியினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல தாயில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டார். இதில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி, தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாராட்டு
முன்னதாக பிளாஸ்டிக்கின் தீமை பற்றி பேசிய மாணவிக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசு வழங்கினார். விழிப்புணர்வு பேரணியில் மேலத்தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மஞ்சள் பைகளை வழங்கினார்.
வெம்பக்கோட்டையில் பராமரிக்கப்படும் மியாவாக்கி காடுகளை பார்வையிட்டு 340 மரக்கன்றுகளை நன்றாக பராமரித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாயை பாராட்டினார்.
கணஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள பண்ணை குட்டை, மண்புழு உரக்கூடத்தை பார்வையிட்டார். வனமூர்த்தி லிங்கபுரம் ஊரணியில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.