சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு வரதட்சணை கொடுமை


சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு வரதட்சணை கொடுமை
x

காரைக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு வரதட்சணை கொடுமை செய்த ஆசிரியர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காந்தி பிச்சை. இவர் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மகள் கார்த்திகா (வயது 27). இவருக்கும் திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் வேலை பார்க்கும் சுரேஷ்குமார் (32) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 70 பவுன் தங்க நகைகள், கார் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 3 வயதில் பெண் குழந்தை உண்டு.

தற்போது சுரேஷ்குமார், தனக்கு ரூ.10 லட்சமும், 10 பவுன் நகைகளையும் வாங்கி வர வேண்டும் என வரதட்சணை கேட்டு கார்த்திகாவை கொடுமைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சுரேஷ்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story